திடீர் கவிதைகள்

அரை நாள் சோர்வை , ஒரே சிரிப்பில் தகர்த்துவிட்டாள்! கடுங்கோபம் கொண்டு திரியும் என்னை ஒரே முத்தத்தை வைத்து காலி செய்கிறாள்! பாவனைக்காக அழுவதாக நடித்தால் அவளும் பதறுகிறாள்!  விளையாடும் அரை மணிநேரமும் முடியவே கூடாது என்று கட்டளை போட்டு சிரிக்கிறாள்! முடியாது என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே  அகற்றுவாள் போல .. இவள் ராணியாகவே பிறந்தாலா இல்லை நான் தான் இப்படி வளர்கிறேனா?  அவள் – மகள் 

இந்தியாவும் தாலிபானும்

மீண்டும் தாலிபான் என்ற தொடர் ஆரம்பித்து முப்பது அத்தியாயங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது.  இதை படிக்க படிக்க, நாம் எவ்வளவு முன்னேறிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பே வருகிறது . அங்கே நடக்கும் பிரச்சனை இஸ்லாமிய பிரச்சனை அல்ல. ஏனென்றால்  அங்கே கொல்பவர்களும் இஸ்லாமியர்கள் – கொல்லப்படுபவர்களும் இஸ்லாமியர்களே. ஒரு நல்ல முஸ்லீம் – கெட்ட முஸ்லீம் சண்டையாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் விவரிக்க வேண்டும் . அனைத்து மதங்களிலும் பிற்போக்கு தனம் இருக்கிறது….

கடவுள் தொடங்கும் இடம்

  இன்று விநாயகர் சதுர்த்தி , facebook முழுக்க விநாயகர் படங்கள் , ஆங்காங்கே சில எதிர் வினைகள் , உதாரணமாக அவர் வடநாட்டு கடவுள் , இல்லை புத்தரை பூசி மொழுகி மாற்றி விட்டார்கள் என்று .. அனைவருக்கும் அவரது கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு , அதே நேரத்தில் எதிர் வினைகளையும் எதிர்பார்த்தே பேச வேண்டும் !  கடவுள் உண்டு என்றால் அணைத்து கடவுளும் உண்டு ! இல்லை என்றால் யாரும் இல்லை ! …

ஹோம் – சுகானுபவம்

  He is not a nobody , He is somebody!  Wait … He is a somebody who is a god for somebody !!  Home படத்தின் சாரம்சமாக நான் கருதுவது மேற்கூறிய வரிகளைதான் . கண்களை குளமாக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டி படம் எடுக்காமல் எதார்த்த சினிமாவின் பயிற்சி பட்டறையாக இந்த படம் இருக்கிறது .  ஓட்டு மொத்த படமும் இந்திரன்ஸ் எனும் ஒரு அற்புத நடிகரிடம் ஆரம்பித்து முடிகிறது . காரணம் அவரது தோற்றமா ,அல்லது உடல் மொழியா , இல்லை சின்ன சின்ன உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டும் விதமா, இல்லை அவரின் அப்பாவிதனமான பாவனைகளா என்றே கண்டுபிடிக்க முடியவில்லை ! கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லவே வேண்டாம் (அது கமல ஹாசருக்கு மட்டுமே சொந்தம் ) ! ஏனென்றால் அவர் நடித்திருக்கிறார் என்றே என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்கள் பார்தார்களோ இல்லையோ , எனக்கு என் தந்தையை படமெங்கும் நியாபக  படுத்திக்கொண்டே இருந்தார் !  மலையாள சினிமா என்றும் உணர்ச்சி வெள்ளத்தை கட்டவிழ்த்து விடுவதில் முன்னோடியாகவே இருக்கிறது !  வாழ்க்கை ஒரு வட்டம் , இங்கே அற்புதத்தை நிகழ்த்தியவர் பலர் நம் அருகிலேயே , ஏன் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்று  சொல்லும்  இந்த கதையில் , எந்த ஒரு குறையும்  கூற முடியாது!  அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். ஒரு ஃபீல் குட் அனுபவத்தை அருவி போல தரும் இந்த படத்தை போல தமிழிலும் சில அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன , உதாரணமாக “தவமாய் தவமருந்து” – என்ன சேரன் அவரது வேலையை – அதாவது அதீத நடிப்பை தந்திருப்பார்! அப்படி எதும் இல்லாமலேயே ஹோம் படம் நிறைவை தருகிறது . கிளைமாக்ஸ் ஒரு உணர்ச்சி பிரவாகம் என்று சொன்னால் மிகையாகாது!  இந்திரனுக்கு  அவரது அப்பாவுடன் இருக்கும் அந்த பிணைப்பு , மகன்களை பார்த்து வரும் அந்த பெருமிதம் , அப்பாவியாக கேட்கும் கேள்விகள், புது மொபைல் வாங்கி கற்றுக்கொள்ள அவர் படும் பாடு என அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது .  ஒரு மெளோடிராமடிக் படத்திற்கான இசையை கச்சிதமாக தந்துள்ளனர்.  இரண்டேமுக்கால் மணிநேரம் ஒடும் படமான இதில் , ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் , அதை கடந்து பார்க்க முடிகிறது . செல்போன் வந்ததில் இருந்து ஆரம்பித்த அத்தனை பிரச்சினைகளையும் பிரச்சாரமாக சொல்லாமல் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள் . அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் ! இல்லை பாடம்! 

கோவிந்தனும் தாலிபானும்

“காலை எழுந்தவுடன் படிப்பு,  பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக  ஒரு மீமு ” இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் “மீண்டும் தாலிபன் “! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு “மீண்டும் தாலிபான்” புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம்  கிடைத்து விடும். ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே  தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது!  புக் பேட் நடத்திய அந்த பயிற்சி வகுப்பில் பாரா சொன்னது இதுதான் -“தினமும் எழுதி பழகுங்கள் என்று ” , எழுதுவதற்கு அறிவு தேவை, அறிவை வளர்க்க படிக்க வேண்டும், தினமும் . அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்த தாலிபன் தொடர் ஆரம்பித்தது. முதல்  இரண்டு அத்தியாயங்கள் படித்ததும் , மீம் போடுவதற்கான ஆசை எழ, அதை செய்து பாரவிற்கு அனுப்பினால், அவர் உற்சாக  படுத்தும் விதமாக தினமும் போட சொல்ல, முதல் 37…

கஞ்சன்

பேருந்து நிலையத்தில் உள்நுழைந்த அந்த பேருந்து தனக்கானது  என்று நினைத்த  செல்வமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது .  இதோ வந்துவிடும் , அதோ வந்துவிடும் என்று மூன்று  மணி நேரமாக ஒரு டீ காபி கூட குடிக்காமல் நின்றிருந்தான் செல்வமணி . மற்றும் ஒரு முறை அருகில் இருந்த டீ கடையின்அருகே சென்று டீ, காபியின் விலையை பார்த்தான் . ஒரு காபிக்கு இவ்வளவு விலையா என்று மனதில் நொந்து கொண்டான் . டீ கடைக்காரர் இவன் அடிக்கடி வருவதும் போவதுமாய் இருந்ததை பார்த்து , முறைக்க ஆரம்பித்தார் .  அப்படியே பார்வையை சுழற்றிய செல்வமணி அங்கு இருந்த  வாலிபர்களை பார்த்தான் , மிக சந்தோசமாக புகைத்தது கொண்டிருக்கும் அவர்களை பார்த்து எரிச்சல் வந்தது.  இன்றைய தேதியில் ஒரு சிகிரெட் அடிக்க முடிகிறதா  .  ஒரு சிகரெட்டை தனியாக வாங்க முடியாதாம் , முழு டப்பாவையும் வாங்க வேண்டுமாம்! , எங்கே போய் கொள்ளை அடிப்பது  .  முன்னொரு காலத்தில் ஒரு சிகரெட் ஒரு ரூபாய் இருந்த பொழுதே , ஒரு நாளைக்கு ஒன்று தான் அடிப்பான் . பின்னர் ஒவ்வொரு வருடத்திற்கும் இவர்கள் விலை ஏற்றி , கடைசியில் வாரத்திற்கு  ஒரு சிகரெட் குடித்து வந்த செல்வமணி அந்த பழக்கத்தை அடியோடு கைவிட்டான். பாக்கெட் நூற்றி இருபது ருபயாம் , எவன் அடிப்பான்  இந்த சிகிரெட்டை.  சரி பீடி இழுக்கலாம் என்றால் வாயெல்லாம் ஒரே நாற்றம் . சுருட்டு கேட்கவேவேண்டாம். இந்த சிகிரெட் சிந்தனைகள் மெல்ல மறைய , மதிய பசி எட்டி பார்த்தது . ஒருவழியாக முடிவெடுத்து அந்த கடைக்காரனின் மிக அருகில் சென்று மெதுவாக “அண்ணா அரைகிளாஸ் டீ கிடைக்குமா” என்றான். ஏற இறங்க பார்த்த அந்த டீக்கடைக்காரர் கோப்பையை எடுத்து அதை முழுதும் கழுவாமல் ஏனோதானோவென்று ஊற்றி தந்தான். மாட்டு மூத்திரம் கூட இன்னும் நன்றாக இருந்திருக்கும் போல, அதை விட கேவலமாக இருந்தது இந்த டீ. டீ தூள் போட சொன்னால் ஆட்டு புளுக்கையை போட்டு வைத்திருப்பான் போல.  கொடுக்கும் ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மட்டமான பொருளைதருகிறார்கள்  என்று  அந்த  டீ கடைகாரணை மனதார திட்டிக்கொண்டு  அதை மெல்ல மெல்ல குடித்தான் செல்வமணி.   இந்நேரம் செல்வமணி எவ்வளவு கஞ்சன் என்று புரிந்து இருக்கும். பெயரில் மட்டும் தான் செல்வமணியே தவிர கையில் என்றுமே செல்வமோ , மணியோ இருந்ததில்லை. எல்லாம் குடும்ப விதி, அவனது தந்தையும் அவனை போலவே அஞ்சு பத்து பார்த்து செலவு செய்தாலும், ஒரு சொந்த வீடு கூட வாங்காமலேயே மண்டையை போட்டர். கடைசி வரை வாடகை வீடு தான் .  அந்த வாடகை வீடு இருக்கும் நாகைநல்லூர் என்ற ஊருக்கு தான்   இவன் செல்வதாக இருந்தான் . அதற்கு நேரடியாக பேருந்து இருந்தாலும் , அதில் விலை சற்று அதிகம் , உள்ளூர் பேருந்தில் சென்றால் காசு மிச்சம் . காசை சேமிக்க , சில மணி நேரங்களை இழக்க முடிவு செய்தான். வறுமையில் இருப்பவர்களுக்கு நேரம் மட்டும் தான் காசில்லாமல் கிடைக்கும் , பணம் மட்டும் கிடைக்கவே கிடைக்காது. கிடைத்தாலும் ஒட்டாது !  இவ்வளவு ஏன், இவன் வேலை பார்க்கும் ஹோட்டல் ஒரு மூன்றாம்  தர ஹோட்டல் தான். இருந்தாலும் இவன் தனது சர்வர் வேலையை சரி வர செய்து கிடைக்கும் டிப்ஸ் பணத்தை சேமித்து வைத்து வந்தான் . அதற்கும் வைத்தார்கள் வேட்டு . போன மாதம் முதல் , வந்த டிப்ஸை மொத்தமாக ஒரு ஜாடியில் போட்டு அனைவருக்கும் பங்கு போட்டு கொடுத்தார்கள். என்ன அநியாயம் பார்த்தீர்களா ! இவன் ஓடி உழைத்து , ஒருவருக்கு வேண்டிய அனைத்து உணவகளையும் சிந்தாமல் ,சிதறாமல் , முகம் சுளிக்காமல் , சிரித்த முகத்துடன் அவர்கள் உணர்வரிந்து சப்ளை செய்து அனுப்பினால் பத்து ரூபாய் கிடைக்கும் , இனி இது பொது சொத்தாம்.  சரி அப்படி சம்பாதித்த பணத்தில் என்ன செய்தான்?பாதியை , மாத சீட்டில் போட்டு வைத்திருந்தான் . சீட்டு நடத்திய  அந்த அயோக்கிய பயல் , மோடி ஐநூறு ரூபாய் செல்லாது என்று அறிவித்த மறுநாளே மஞ்சள் நோட்டீஸ் ஒட்டி விட்டு ஓடி விட்டான் ! யாரை குற்றம் சொல்வது? இது தன் விதியே என்று நம்பினான் , அன்றிலிருந்து விட்ட காசை பிடிக்க  ஆகப்பெரிய கஞ்சனாக உருவெடுத்தான். ஒருவழியாக அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து கண்டக்டரிடம் சென்றான் . தனது ஊருக்கு அடுத்த உள்ளூர் பேருந்து எப்பொழுது என்ற கேட்டதும்  அவர் “இன்று முதல் பேருந்து முன்னரே கிளம்பி விட்டது தம்பி , அடுத்த பேருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது  ” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.  குடித்த டீ , வயிற்று அமிலத்தில் கரைந்து மறுபடியும்  பசி வர  ஆரம்பித்திருந்தது . சாப்பிட எப்படியும் ஐம்பது  ரூவா ஆகும் , விட்டிற்கு போய்விட்டால் காசில்லாமல் சாப்பிட்டு விடலாம் என்று மணக்கண்கில் அரை மணி நேரம் தொலைதான் . பசி வயிற்றை நொண்ட, போய்தொலைக்கிறது என்று அங்கே நின்றிருந்த நேரடி பேருந்தில் ஏறினான் .. ஒரு வழியாக அந்த பேருந்து கிளம்பி அரை கிலோமீட்டர் சென்றிருக்கும் , அப்பொழுதான் அவன் எதிர் வரும் பேருந்தை பார்த்தான் , அதிர்ந்தான்!  நாகை நல்லூர் உள்ளூர் பேருந்து அவனை மதிக்காமல் , இவன் இவ்வளவு நேரம் காத்திருந்த பேருந்து நிலையம் நோக்கி  சென்றது!  அதை பிடிக்க , படாரென எழுந்து , ஒடும்…