நரகத்தில் ஒரு நிமிடம்

 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! அப்பப்பா , நரகத்திற்கு சென்று  வந்ததை  போல இருந்தது . படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில்  ரத்தம் !  விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அவனது தோல் பட்டையில் இருந்து பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தனக்கெண்ணவோ ஒன்று நடக்கிறது என்று உணர , தொண்டை வறண்டது . இந்த முறை  தண்ணி குடிக்க பிரிட்ஜை  நோக்கி விரைந்தான் . பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதுவும் ஒவ்வொன்றும் வேறு வயதுடைய சடலங்கள் . . அதில்  சிதலாமடைந்த ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது .  இவற்றைபார்த்ததில் முகுந்திற்கு இதயத்துடிப்பு அதிகரித்து வாந்தி வருவது போல இருந்தது . உடனடியாக பாத்ரூம் சென்றுவாந்தி எடுத்தால் , வாயிலிருந்து  பூச்சிகளாக கொட்டின ! பின்னங்கால் பிடறியில் அடிக்க வெளியில் வந்து போனை எடுத்தான் .  அந்த அலைபேசியில் யாரையோ அழைக்க முயல , எதிர் தரப்பில் யாரும் வராமல்  அழுகை குரல்கள் மட்டுமே கேட்டன ! வீடியோ கால் செய்தால் , இவன் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் ஓட்டைகள் ! இதய துடிப்பு இவனது காதிற்கே கேட்டது . சடாரென போனை விட்டெரிந்து , சாமி அறை பக்கம்  ஓட , திடீரென சாமி இருந்த அறை பூமியில் புதைந்தது , ஒரு முடிவில்லா  பள்ளமே இவனை வரவேற்றது .  என்னடா இது என்று கதறி அழ ஆரம்பித்தால் , சிரிப்பு மட்டுமே வந்தது . நமக்கு மட்டும் தான் இப்படியா இல்லை நாடு முழுகலாவே இப்படித்தானா என்று கண்டுபிடிக்க தொலைக்காட்சியை போட்டால், எந்த பொத்தானை  அழுத்தினாலும் பேய் வந்து நிற்கிறது . அதிலிருந்து வெளியே வர வேறமுயற்சி செய்கிறது . கொடுமையின் உச்சி என்னவென்று முகுந்த் உணர்ந்துகொண்டே இருந்தான் . போதுமடா சாமி என்று வீட்டை விட்டு ஓட  கதவை திறந்தால் , இவனது காலில் எரிமலையின் குழம்பு பட்டது. நிமிர்ந்து பார்த்தால் வீடே குழம்பில் தான் மிதந்து கொண்டு இருக்கிறது , தலை கிருகிறுத்து செத்து தொலைவோம் என்று கிழே குதித்தான். தரையே தென்படவில்லை ….

மீண்டும் தாலிபன் – அட்டகாசமான ஆரம்பம்

பாராவின் ”  மீண்டும் தாலிபன் ” அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது , இரு அத்தியாயங்களை முடித்தவுடன் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது .   சோழியின் குடுமி சும்மா ஆடாது என்பார்கள் , அக்மார்க் உதாரணம் அமெரிக்கா . ஆனால் அவர்களுக்கே பத்து பைசா பிரயோஜனம் இல்லாத ஆப்கனில் இருபது வருடங்கள் செலவு செய்ய வேண்டிய நிலைமை, உபயம் ஒசாமா , இரண்டு ஆண்டுகளிலேயே அவன் அங்கு இல்லை…

நவரசா – ஒரு துன்பியல் சம்பவம் – பாகம் 1

ரௌத்திரம் என்ற ஒரு படம் – காட்சி கீழே  அந்த பையனின் வீட்டில் மின்சாரம் போய் விடுகிறது.  தமிழகத்தில் , ஏன் இந்தியாவில் உள்ள அனைவரும் அடுத்து செய்வது , பக்கத்து வீட்டில் மின்சாரம் இருக்கிறதா என்று பார்ப்பதாக தான் இருக்கும். இது ஒரு கிளிஷே. அந்த பையனும்  , பக்கத்து வீட்டை பார்க்கின்றான் . விளக்கு எரிகிறது, வாசலில் நியான் ஒளியில் அந்த பெண் நிற்கிறாள் , இருந்தாலும் கேட்கிறான், “மின்சாரம் உள்ளதா” என்று.  இத்தனைக்கும்…

காடும் பாம்பும்

இது ஒரு சுமாரான கிராமம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக , அட்டகாசமான ஒரு காடாக இருந்து, இன்று சுமாரான கிராமமாக மாறிய காடு . முதலில் வந்த மனிதர்கள், காட்டின் விதிகள் அறிந்து, அதனூடே பயணித்து, அதற்கு குந்தகம் விளைவிக்காமல் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த மனிதர்கள் இவர்களை காட்டுமிராண்டி என்று அடித்து துரத்தி, தன் போக்கில் வாழ ஆரம்பித்தார்கள். அடுத்து வந்த பல ஆண்டுகளில், அந்த காடும் பொலிவை எல்லாம் இழந்து இன்று இப்படி ஒரு…