ஷங்கர்

ஷங்கருக்கு படபடப்பு அதிகமானது, உடல் வியர்த்து, சட்டை நனைய தொடங்கியது. அடடா இப்படி செய்து விட்டோமே என்ற நினைப்பு வந்து வந்து சென்றது. தரையில் ரத்தம் படற தொடங்கி, இவன் காலருகே நின்று, இவனை தொடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. மிக அருகாமையில் சாந்தி அசைவற்று கிடந்தாள், இவன் கிரைண்டர் கல்லை தூக்கி மண்டையில் அடித்த இடம், சகதியாக இருந்தது. இது சாந்தி தானா என்ற சந்தேகம் இவனுக்கே வந்தது. சந்தேகமேயில்லை அவளே தான், எப்பொழுதும்…

Pagam 1

வண்டிப்பாளையத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த பச்சை நிற பேருந்து. வந்து நிற்கும் முன்பே வாலிபர்கள் சர சரவென குதித்து ஓட , வயோதிகர்கள் மற்றும் ஓடும் வண்டியில் இருந்து இறங்க தெரியாத அப்பாவிகள், படிகளை நோக்கி படை எடுத்தனர். வாலிபர்கள் குதித்த அதே நேரத்தில், கிழே நிற்கும் கூட்டம் பேருந்தின் உள்  நுழைய ஆயத்தமானது. வேட்டியை இழுத்துக்கொண்டு ஒரு பெருசு இறங்கியதும் ஒரு வாலிபர் அவரை உரசிக்கொண்டு உள்நுழைய பார்க்க, பெருசு முணுமுணுக்க, “யோவ்…