IAS

 एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना । स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥ He who thus recognizes in his individual soul (Self, Atman), the universal soul that exists in all beings,becomes equal-minded towards all, and enters the highest state, Brahman. — Manusmriti 12.125, Calcutta manuscript with Kulluka Bhatta commentary[32][33] கண்ணப்பனுக்கு நீண்ட காலமாக ஒரு ஆசை, எப்படியாவது ஒரு ஐயரை பிடித்து அவனது தந்தைக்கு ஒரு திதி கொடுக்க வேண்டும் என்பது தான். அவனது அப்பாவிற்கு ராம  தீட்சதர் என்று ஒருவர் அமைந்தார் . ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறும் வாழைக்காயை வாங்கிக்கொண்டு அவர் தர்ப்பணம் செய்து வைப்பார் . ராம  தீட்சதர் தீட்டு பார்ப்பவர் என்றாலும் , தர்பணத்தின் பொழுது அப்பாவின் கையை பிடித்தே சன்மானத்தை வாங்குவார். கண்ணப்பனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது நீங்கள் என்னை தொட்டால் தீட்டா என்று கேட்டே விட்டான் . அந்த கேள்வியினால் ஐயர் திகைக்க , கண்ணப்பனின் அப்பாவோ ரெண்டு சாத்து  சாத்தினார் .  அடுத்து வந்த முப்பது வருடங்களில் அவனுக்கு இதே கேள்விக்கு பல்வேறு விடைகள் கிடைத்தன .  முதல் விடை.  கண்ணப்பனிற்கு பதினேழு வயது, ஜாதி சான்றிதழில் வண்ணான் என்று போட்டு   SC என்றும் சான்றளிதார் அந்த தாசில்தார் .  இரண்டாம் விடை.  கண்ணபணுக்கு 24 வயது.  இந்த முறை எதற்கோ ஒரு சான்றிதழ் தேவை படதாசில்தாரிடம் செல்ல நேர்ந்தது . அப்பொழுது   இராம ஐய்யர் ஓரமாக நின்று யாரிடமோ கெஞ்சிகொண்டிருந்தார்.  ஐந்து நிமிடம் கவனித்ததில் அவருக்கு அரசு வழங்கும் மாத கருணை தொகையை பெற ஒரு சான்றிதழ் தேவை என்பதனை அறிந்தான் .  புதிதாக வந்திருக்கும் தாசில்தார் ஒரு வகையான ஊழல் பேர்வழி . காசு இல்லாமல் காலில் கடிக்கும் கொசுவை கூட கொல்ல மாட்டான். இவனுக்கு ஐய்யரை பார்த்து பிரிதாபம் ஏற்பட, உள்ளேசென்று அவன் பேசி ஒரே நிமிடத்தில் வாங்கி கொடுத்தான். ஐயர் அந்த சான்றிதலை வாங்கி இவன் கை தொட்டே நன்றி சொன்னார்.  பல ஆண்டு ஆனாலும் , அதே தீட்டு கேள்வியை அவன் மறுபடியும் கேட்க, ஐயர்ஆரம்பித்தார். அதாவதுடா அம்பி, அந்த காலத்துல என்று ஆரம்பித்து அவர் கூறியதின் சாராம்சம் இது தான். அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, மக்களின் தொழிற்கு ஏற்ப அவர் நான்கு வர்ணங்களில் பிரிக்கபட்டதாகவும் , யார் வேண்டுமானாலும் ஐய்யராகவோ , சத்திரியனாகவும் மாறலாம் ஆனால் பின்னொரு நன்னாளில் , இது பிறப்பை ஒட்டி மாறியதாகவும் , அப்பொழுதிலிருந்து இந்த தீட்டு கலாச்சாரம் ஆரம்பித்து என்று முடித்தார் . கண்ணபனுக்கு , ஐயர் சொல்வதில் எந்தளவு உண்மை என்ற அடுத்த கேள்வி எழுந்தது . கிளம்பும் முன் அய்யரிடம் , அவரது மகன் தற்பொழுது மார்கெட்டிங் துறையில் இருக்கிறானே அவன் ஐய்யரா இல்லை வர்ணத்தின் படி சூத்திரனா என்று கேட்க , ஐயர் திகைத்தாலும் , சிரித்துகொண்டே முறைத்தார் . மூன்றாம் விடை. ஐ யே எஸ் தேர்வுக்கு மூன்றாம் முறையாக எழுத தயார் செய்யும் பொழுது அவனுக்கு திராவிடத்தின் அறிமுகம் ஏற்பட்டது. திராவிடம் சார்ந்த நூல்கள் எல்லாமே சாதிய வன்மம்  எல்லாமே ஏதோ ஆரியர்களின் செயல் , இந்து சமவெளியில் இருந்து  புறப்பட்டு வந்து நம்மை வென்று நம்மை அடிமையாக்கி விட்டனர் என்பது போலவே எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்தவுடன் கண்ணப்பனுக்கு இன்னும் நிறைய கேள்விகள் எழுந்தன. உதாரணத்திற்கு எங்கிருந்தோ வரும் ஒருவனை நாம் ஏன் ஏற்றுக்கொண்டு  அடிமையாகவேண்டும். அதை விட எங்கிருந்தோ வரும் ஒருவன் தனக்கு மேல் என்று சொல்லும்போது இங்கே இருந்த கோடிக்கணக்கான மக்களுக்கு அது எப்படி சரியாக பட்டது.  ஒருவேளை அவர்கள் வெள்ளையாக இருந்து நாம் அனைவருமே கருப்பாக இருந்து வெள்ளை கருப்பிற்கு மேல் என்று ஒரு கருத்தாக்கம் பரப்பப்பட்டதா என்று தெரியவில்லை. அதேபோல் பார்ப்பனர்கள் வெள்ளைத் தோலுடன் வந்து ராஜாக்களின் மிக முக்கிய இடங்களில் பொறுமையாக படியேறி மன்னர்களிடம் இந்த வர்ணங்களைஅறிமுகப்படுத்தினார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை. அன்றைய  காலத்திலும் பறையடிக்கும் பறையர்கள் இருந்தார்கள் துணிதுவைக்கும் வண்ணான்  இருந்தார்கள் என்பது மட்டும் உண்மை. அத்தனை பிரச்சனைகளுக்கும் பார்ப்பனர் தான் காரணம் என்றால் அவர்களுக்கு கீழ் இருக்கும் ஜாதிகளிலும் ஏன் மக்கள் இன்னும் சாதி வெறியுடன் தெரிகிறார்கள். தனக்கு மேலே ஒருவன் ஏற்கனவே  மேல்சாதி என்கிறான்,  அப்படி இருக்கும்போது தனக்கு கீழ் இருக்கும் ஒரு சாதியை இவர்களுக்கு எப்படி கீழ்சாதி என்று கூப்பிட தோன்றுகிறது. …

Pagam 1

வண்டிப்பாளையத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த பச்சை நிற பேருந்து. வந்து நிற்கும் முன்பே வாலிபர்கள் சர சரவென குதித்து ஓட , வயோதிகர்கள் மற்றும் ஓடும் வண்டியில் இருந்து இறங்க தெரியாத அப்பாவிகள், படிகளை நோக்கி படை எடுத்தனர். வாலிபர்கள் குதித்த அதே நேரத்தில், கிழே நிற்கும் கூட்டம் பேருந்தின் உள்  நுழைய ஆயத்தமானது. வேட்டியை இழுத்துக்கொண்டு ஒரு பெருசு இறங்கியதும் ஒரு வாலிபர் அவரை உரசிக்கொண்டு உள்நுழைய பார்க்க, பெருசு முணுமுணுக்க, “யோவ்…

Top 4 Anime, in “Netflix”.

What is anime If you are wondering whether Anime is cartoon , well , the answer is Yes, and NO… Cartoons are mostly 2D and Anime can be 2D , 3D. But the main difference is that , Unlike cartoons , Anime are made for Adults. So you will most probably see variety of genres…