ஒரே மொழி, ஒரே தேசம்,அடுத்து தெவசம் – part 1

 தமிழனுக்கு இந்தி தேவையா? தமிழுக்கு நிகரான ஒரு மொழியே இல்லை என்பது தான் இன்று வரை என்னுடைய கருத்து.  அதே போல மத்த மொழிக்காரர்களுக்கும் அவர்கள் மொழியே பெரிது என்ற கருத்துக்கும்  நியாயம் உண்டு.  இந்தியாவை போல மொழிவாரியாக மாநிலங்களை கொண்ட தேசம் வேறொன்று இருக்கிறதா என்று தெரியவில்லை, ஒரு வேலை ஐரோப்பா கிட்ட வரலாம். ஆனால் அவர்களுக்கு ஒரே நாடும் கிடையாது , ஒரே மொழியும் கிடையாது, அப்படியே தேவை பட்டாலும் ஆங்கிலம் இருக்கிறது. அதுவும் ,…

naai

அய்யோ வலி தாங்க முடியலையே என்று மனைவி கதற, அவளை திரும்பி பார்த்தபடியே ஆட்டோவின் வேகத்தை கூட்டினான் கோபி. சதக் என்று ஒரு சத்தம்,  வண்டி அரை நொடி தடுமாறியது . நாய் கத்தும் சத்தம் கேட்டதும், தான் அவசரத்தில் அதன் மேல் வண்டியை ஏற்றி விட்டோம் என்று உணர்ந்தான் . ஒரு நிமிடம் அந்த நாயை பார்த்து விட்டு வரலாமா என்று யோசித்துவிட்டு முன்னேறினான்.  தங்கம்மா பிரசவ வலியில் பின்னால் இருக்க, இவன் எப்படி நிறுத்த முடியும்….

திடீர் கவிதைகள்

அரை நாள் சோர்வை , ஒரே சிரிப்பில் தகர்த்துவிட்டாள்! கடுங்கோபம் கொண்டு திரியும் என்னை ஒரே முத்தத்தை வைத்து காலி செய்கிறாள்! பாவனைக்காக அழுவதாக நடித்தால் அவளும் பதறுகிறாள்!  விளையாடும் அரை மணிநேரமும் முடியவே கூடாது என்று கட்டளை போட்டு சிரிக்கிறாள்! முடியாது என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே  அகற்றுவாள் போல .. இவள் ராணியாகவே பிறந்தாலா இல்லை நான் தான் இப்படி வளர்கிறேனா?  அவள் – மகள் 

இந்தியாவும் தாலிபானும்

மீண்டும் தாலிபான் என்ற தொடர் ஆரம்பித்து முப்பது அத்தியாயங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது.  இதை படிக்க படிக்க, நாம் எவ்வளவு முன்னேறிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பே வருகிறது . அங்கே நடக்கும் பிரச்சனை இஸ்லாமிய பிரச்சனை அல்ல. ஏனென்றால்  அங்கே கொல்பவர்களும் இஸ்லாமியர்கள் – கொல்லப்படுபவர்களும் இஸ்லாமியர்களே. ஒரு நல்ல முஸ்லீம் – கெட்ட முஸ்லீம் சண்டையாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் விவரிக்க வேண்டும் . அனைத்து மதங்களிலும் பிற்போக்கு தனம் இருக்கிறது….

கடவுள் தொடங்கும் இடம்

  இன்று விநாயகர் சதுர்த்தி , facebook முழுக்க விநாயகர் படங்கள் , ஆங்காங்கே சில எதிர் வினைகள் , உதாரணமாக அவர் வடநாட்டு கடவுள் , இல்லை புத்தரை பூசி மொழுகி மாற்றி விட்டார்கள் என்று .. அனைவருக்கும் அவரது கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு , அதே நேரத்தில் எதிர் வினைகளையும் எதிர்பார்த்தே பேச வேண்டும் !  கடவுள் உண்டு என்றால் அணைத்து கடவுளும் உண்டு ! இல்லை என்றால் யாரும் இல்லை ! …

ஹோம் – சுகானுபவம்

  He is not a nobody , He is somebody!  Wait … He is a somebody who is a god for somebody !!  Home படத்தின் சாரம்சமாக நான் கருதுவது மேற்கூறிய வரிகளைதான் . கண்களை குளமாக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டி படம் எடுக்காமல் எதார்த்த சினிமாவின் பயிற்சி பட்டறையாக இந்த படம் இருக்கிறது .  ஓட்டு மொத்த படமும் இந்திரன்ஸ் எனும் ஒரு அற்புத நடிகரிடம் ஆரம்பித்து முடிகிறது . காரணம் அவரது தோற்றமா ,அல்லது உடல் மொழியா , இல்லை சின்ன சின்ன உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டும் விதமா, இல்லை அவரின் அப்பாவிதனமான பாவனைகளா என்றே கண்டுபிடிக்க முடியவில்லை ! கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லவே வேண்டாம் (அது கமல ஹாசருக்கு மட்டுமே சொந்தம் ) ! ஏனென்றால் அவர் நடித்திருக்கிறார் என்றே என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்கள் பார்தார்களோ இல்லையோ , எனக்கு என் தந்தையை படமெங்கும் நியாபக  படுத்திக்கொண்டே இருந்தார் !  மலையாள சினிமா என்றும் உணர்ச்சி வெள்ளத்தை கட்டவிழ்த்து விடுவதில் முன்னோடியாகவே இருக்கிறது !  வாழ்க்கை ஒரு வட்டம் , இங்கே அற்புதத்தை நிகழ்த்தியவர் பலர் நம் அருகிலேயே , ஏன் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்று  சொல்லும்  இந்த கதையில் , எந்த ஒரு குறையும்  கூற முடியாது!  அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். ஒரு ஃபீல் குட் அனுபவத்தை அருவி போல தரும் இந்த படத்தை போல தமிழிலும் சில அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன , உதாரணமாக “தவமாய் தவமருந்து” – என்ன சேரன் அவரது வேலையை – அதாவது அதீத நடிப்பை தந்திருப்பார்! அப்படி எதும் இல்லாமலேயே ஹோம் படம் நிறைவை தருகிறது . கிளைமாக்ஸ் ஒரு உணர்ச்சி பிரவாகம் என்று சொன்னால் மிகையாகாது!  இந்திரனுக்கு  அவரது அப்பாவுடன் இருக்கும் அந்த பிணைப்பு , மகன்களை பார்த்து வரும் அந்த பெருமிதம் , அப்பாவியாக கேட்கும் கேள்விகள், புது மொபைல் வாங்கி கற்றுக்கொள்ள அவர் படும் பாடு என அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது .  ஒரு மெளோடிராமடிக் படத்திற்கான இசையை கச்சிதமாக தந்துள்ளனர்.  இரண்டேமுக்கால் மணிநேரம் ஒடும் படமான இதில் , ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் , அதை கடந்து பார்க்க முடிகிறது . செல்போன் வந்ததில் இருந்து ஆரம்பித்த அத்தனை பிரச்சினைகளையும் பிரச்சாரமாக சொல்லாமல் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள் . அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் ! இல்லை பாடம்! 

கோவிந்தனும் தாலிபானும்

“காலை எழுந்தவுடன் படிப்பு,  பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக  ஒரு மீமு ” இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் “மீண்டும் தாலிபன் “! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு “மீண்டும் தாலிபான்” புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம்  கிடைத்து விடும். ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே  தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது!  புக் பேட் நடத்திய அந்த பயிற்சி வகுப்பில் பாரா சொன்னது இதுதான் -“தினமும் எழுதி பழகுங்கள் என்று ” , எழுதுவதற்கு அறிவு தேவை, அறிவை வளர்க்க படிக்க வேண்டும், தினமும் . அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்த தாலிபன் தொடர் ஆரம்பித்தது. முதல்  இரண்டு அத்தியாயங்கள் படித்ததும் , மீம் போடுவதற்கான ஆசை எழ, அதை செய்து பாரவிற்கு அனுப்பினால், அவர் உற்சாக  படுத்தும் விதமாக தினமும் போட சொல்ல, முதல் 37…

நரகத்தில் ஒரு நிமிடம்

 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! அப்பப்பா , நரகத்திற்கு சென்று  வந்ததை  போல இருந்தது . படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில்  ரத்தம் !  விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அவனது தோல் பட்டையில் இருந்து பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தனக்கெண்ணவோ ஒன்று நடக்கிறது என்று உணர , தொண்டை வறண்டது . இந்த முறை  தண்ணி குடிக்க பிரிட்ஜை  நோக்கி விரைந்தான் . பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதுவும் ஒவ்வொன்றும் வேறு வயதுடைய சடலங்கள் . . அதில்  சிதலாமடைந்த ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது .  இவற்றைபார்த்ததில் முகுந்திற்கு இதயத்துடிப்பு அதிகரித்து வாந்தி வருவது போல இருந்தது . உடனடியாக பாத்ரூம் சென்றுவாந்தி எடுத்தால் , வாயிலிருந்து  பூச்சிகளாக கொட்டின ! பின்னங்கால் பிடறியில் அடிக்க வெளியில் வந்து போனை எடுத்தான் .  அந்த அலைபேசியில் யாரையோ அழைக்க முயல , எதிர் தரப்பில் யாரும் வராமல்  அழுகை குரல்கள் மட்டுமே கேட்டன ! வீடியோ கால் செய்தால் , இவன் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் ஓட்டைகள் ! இதய துடிப்பு இவனது காதிற்கே கேட்டது . சடாரென போனை விட்டெரிந்து , சாமி அறை பக்கம்  ஓட , திடீரென சாமி இருந்த அறை பூமியில் புதைந்தது , ஒரு முடிவில்லா  பள்ளமே இவனை வரவேற்றது .  என்னடா இது என்று கதறி அழ ஆரம்பித்தால் , சிரிப்பு மட்டுமே வந்தது . நமக்கு மட்டும் தான் இப்படியா இல்லை நாடு முழுகலாவே இப்படித்தானா என்று கண்டுபிடிக்க தொலைக்காட்சியை போட்டால், எந்த பொத்தானை  அழுத்தினாலும் பேய் வந்து நிற்கிறது . அதிலிருந்து வெளியே வர வேறமுயற்சி செய்கிறது . கொடுமையின் உச்சி என்னவென்று முகுந்த் உணர்ந்துகொண்டே இருந்தான் . போதுமடா சாமி என்று வீட்டை விட்டு ஓட  கதவை திறந்தால் , இவனது காலில் எரிமலையின் குழம்பு பட்டது. நிமிர்ந்து பார்த்தால் வீடே குழம்பில் தான் மிதந்து கொண்டு இருக்கிறது , தலை கிருகிறுத்து செத்து தொலைவோம் என்று கிழே குதித்தான். தரையே தென்படவில்லை ….

மீண்டும் தாலிபன் – அட்டகாசமான ஆரம்பம்

பாராவின் ”  மீண்டும் தாலிபன் ” அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது , இரு அத்தியாயங்களை முடித்தவுடன் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது .   சோழியின் குடுமி சும்மா ஆடாது என்பார்கள் , அக்மார்க் உதாரணம் அமெரிக்கா . ஆனால் அவர்களுக்கே பத்து பைசா பிரயோஜனம் இல்லாத ஆப்கனில் இருபது வருடங்கள் செலவு செய்ய வேண்டிய நிலைமை, உபயம் ஒசாமா , இரண்டு ஆண்டுகளிலேயே அவன் அங்கு இல்லை…

நவரசா – ஒரு துன்பியல் சம்பவம் – பாகம் 1

ரௌத்திரம் என்ற ஒரு படம் – காட்சி கீழே  அந்த பையனின் வீட்டில் மின்சாரம் போய் விடுகிறது.  தமிழகத்தில் , ஏன் இந்தியாவில் உள்ள அனைவரும் அடுத்து செய்வது , பக்கத்து வீட்டில் மின்சாரம் இருக்கிறதா என்று பார்ப்பதாக தான் இருக்கும். இது ஒரு கிளிஷே. அந்த பையனும்  , பக்கத்து வீட்டை பார்க்கின்றான் . விளக்கு எரிகிறது, வாசலில் நியான் ஒளியில் அந்த பெண் நிற்கிறாள் , இருந்தாலும் கேட்கிறான், “மின்சாரம் உள்ளதா” என்று.  இத்தனைக்கும்…